47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகையில் சாலை மறியல்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 பேர் கைது

நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 பேரை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.

News image
நாகை பொது அலுவலக சாலையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.
Updated On :10 பிப்ரவரி 2021, 9:27 am

DIN

நாகப்பட்டினம்: நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 

மத்திய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், புதிய வேளாண் சட்டங்களுக்கு  எதிர்ப்புத் தெரிவித்தும் தில்லி எல்லையில் கடந்த 70 நாள்களுக்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவுத் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய காங்கிரஸ் கட்சியினர், நாகை  பொது அலுவலக  சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட  ஒரு பெண் உள்ளிட்ட 23 பேரை கைது செய்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்டத் தலைவர் ஆர்.என். அமிர்த ராஜா தலைமை வகித்தார். நாகூர்  நகரத் தலைவர் அப்துல் காதர், கீழ்வேளூர் வட்டாரத் தலைவர் ஜி. கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மைத் துறை மாவட்டத் தலைவர் என். முஹம்மது ரபீக், மாவட்டச் செயலாளர் நிலோபர் பேகம்,  மாவட்டத் துணைத் தலைவர் முஹம்மது ரியாஸ், பொதுச் செயலாளர் எம். ஜி. ஜலாலுதீன் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.