தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சங்ககிரி: தில்லியில் உயிரிழந்த விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை 

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சங்ககிரியில் நடைபெற்றது. 

News image
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சங்ககிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுதில்லியில் உயிரிழந்த விவசாயிகளின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்துகிறார் மாவட்டத் தலைவர் சி.எஸ்.ஜெய்குமார்.
Updated On :10 பிப்ரவரி 2021, 9:38 am

DIN

சங்ககிரி: சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதுதில்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்றது. 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மலர்களால் அங்கரிக்கப்பட்டிருந்த உயிரிழந்த விவசாயிகளின் உருவப்படத்திற்கு அக்கட்சியின் மாவட்டத்தலைவர் சி.எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

சங்ககிரி வட்டாரத் தலைவர் செங்கோடன், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சங்ககிரி வட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி, தேவூர் நகரத் தலைவர்  சந்திரன்,  சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் பி.சி.மணி, முன்னாள்  மாநிலச் செயலர் கே.நடராஜன்,  இளைஞரணி நிர்வாகிகள் கார்த்தி, விஸ்வநாதன், நாகேந்திரன், குமார், நிர்வாகிகள் காசிலிங்கம், பி.பிசுப்ரமணி, செங்கோட்டுவேலு, அரசிராமணி பொன்சித்தையன், பழனியப்பன், ஆறுமுகம், குஞ்சாம்பாளையம் ராஜா, அங்கமுத்து, ஆறுமுகம், சின்னுசாமி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.