தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாரியார் குடும்பத்தினர் முதல்வருக்கு நன்றி

கிருபானந்த வாரியார் பிறந்த தினத்தை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு வாரியார் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

News image

முதல்வர் பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்த ஆன்மிக சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் குடும்பத்தினர்.

Updated On :10 பிப்ரவரி 2021, 9:03 am

DIN

வேலூர்: கிருபானந்த வாரியார் பிறந்த தினத்தை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு வாரியார் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

காட்பாடி, காங்கேயநல்லூரில் பிறந்து சைவ சமய சொற்பொழிவாற்றி அதன் மூலம் கிடைத்த வருவாயில் ஏழை மக்களுக்கு கல்வி, மருத்துவம், திருமணம் உள்ளிட்ட சமூக சேவைகள் புரிந்தவா் திருமுருக கிருபானந்தவாரியாா். அவா் நினைவாக கிருபானந்த வாரியாா் பிறந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று வேலூரில் செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

இந்த அறிவிப்புக்கு வாரியார் குடும்பத்தினர் முதல்வரை புதன்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.