தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டியிருக்கலாம்: ஸ்டாலின்

குட்கா வழக்கில் காட்டும் வேகத்தை தமிழக அரசு குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டி இருக்கலாமே என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

News image

வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டியிருக்கலாம்: ஸ்டாலின்

Updated On :17 பிப்ரவரி 2021, 5:32 pm


குட்கா வழக்கில் காட்டும் வேகத்தை தமிழக அரசு குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டி இருக்கலாமே என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவில் நடப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜனநாயக உரிமையின் அடிப்படையில் குட்கா பொட்டலங்களைச் சட்டசபைக்குக் கொண்டு சென்று காண்பித்தோம்.

அதற்காக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான உரிமையையே பறிக்க நினைத்தார்கள். முதல் முறையே இந்த நடவடிக்கைக்குத் தடை போட்டது உயர்நீதிமன்றம்.  மறுபடியும் நோட்டீஸ் அனுப்பினார்கள். அதையும் இன்று ரத்து செய்துவிட்டது உயர்நீதிமன்றம்.

இந்த வேகத்தை குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டி இருக்கலாம்.  இன்னும் விற்பனை தொடருவதாகவே சொல்கிறார்கள். திமுக ஆட்சியில் குட்கா விற்பனை முழுமையாகத் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.