ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி: அவிநாசி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

அவிநாசி ராயம் பாளையத்தில் சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

News image
Updated On :12 பிப்ரவரி 2021, 10:30 am

DIN

அவிநாசி ராயம் பாளையத்தில் சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியது, 

அவிநாசி அரசு கலைக்கல்லூரி முதல் ராயம்பாளையம் வரை சாலை அமைக்கும் பணி மூன்று மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இதற்காக சாலைகள் தோண்டப்பட்டுப் பணி தொடராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் புழுதி காடாகக் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இதுகுறித்து பலமுறை முறையிட்டும் பேரூராட்சி நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக சாலைப் பணியைத் தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தினர் பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

இதில் சாலைப் பணியை ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்கள் உடன் பேசி செவ்வாய்க்கிழமை பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை காலை, மாலை இரு நேரங்களிலும் மண் புழுதி பறக்காமல் இருக்கத் தண்ணீர் விடப்படும் என உறுதி அளித்துள்ளார். செவ்வாய்க்கிழமைக்குள் பணிகளைத் தொடங்காவிட்டால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறி கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.