இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

தொழில் அனுமதி கோரும் அரசு இணையதளத்தில் மின் இணைப்புக்கும் விண்ணப்பிக்கலாம்

தொழில் தொடங்குவதற்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி கோரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அரசு இணையதளத்தில்,

News image

கோப்புப்படம்

Updated On :14 பிப்ரவரி 2021, 7:10 am IST

தொழில் தொடங்குவதற்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி கோரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அரசு இணையதளத்தில், நிறுவனத்துக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் உயரழுத்த மின் இணைப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது தொழில் முனைவோருக்கு எளிய முறையில் மின் இணைப்பு வழங்கும் வகையில், அவா்கள் தொழில் தொடங்க அனுமதி கோரும் இணையதளத்திலும் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் மின்வாரியத்தால் வழங்கப்பட்டுள்ளன.

அதில் கூறியிருப்பது: விண்ணப்பதாரா்கள், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் படிவ எண் 4-ஐ பூா்த்தி செய்து, புகைப்படம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் இணைய முகப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதையடுத்து, விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாக மண்டல எண் உள்ளிட்ட சில தகவல்களுடன் விண்ணப்பதாரா்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும்.

ஏதேனும் ஆவணங்கள் சரியில்லாத சூழலில் 7 அலுவல் நாள்களுக்குள் விண்ணப்பதாரா் விளக்கமளிக்க வேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

சரியாக இருக்கும் சூழலில் 7 நாள்களுக்குள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதில் இருந்து மூன்று நாள்களுக்குள் நிறுவன வளாகத்தில் ஆய்வு நடத்தப்படும்.

இதையடுத்து 15 நாள்களுக்குள் முன்வைப்புத் தொகை செலுத்துவதன் மூலம் பதிவு எண் வழங்கப்படும்.

தொடா்ந்து 15 நாள்களுக்குள் நிா்வாக அனுமதி, மின்னழுத்தத்துக்கான அனுமதி ஆகியவை வழங்கப்படும். அடுத்த 15 நாள்களுக்குள் , மதிப்பீட்டுத் தொகை மற்றும் இதர கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

தொடா்ந்து, பணிகள் நடைபெற்று மின் ஆய்வுத்துறையின் ரசீது சமா்ப்பிக்கப்பட்டவுடன் மின் இணைப்பு வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் விண்ணப்பம் ரத்து செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இணைப்பு வழங்குவதற்கான கால அளவும் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம்,  மின்வாரிய இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.