புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிவகாசியில் மாற்றுத் தொழிற்சாலைகளை உருவாக்கினால் பட்டாசு விபத்துகளைத் தடுக்கலாம்: துரைமுருகன்

சிவகாசியில் மாற்றுத் தொழிற்சாலைகளை உருவாக்கினால் காலப்போக்கில் பட்டாசு விபத்துகளைத் தடுக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

News image

கோப்புப் படம்.

Updated On :14 பிப்ரவரி 2021, 1:49 pm

DIN

சிவகாசியில் மாற்றுத் தொழிற்சாலைகளை உருவாக்கினால் காலப்போக்கில் பட்டாசு விபத்துகளைத் தடுக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வேலூரில், செய்தியாளர்கள் என்னை சந்தித்த போது "சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட ஒரு விபத்தின் விளைவாக பலர் இறந்திருக்கிறார்களே?" என்ற கேள்வியை என்னிடம் கேட்டார்கள்.

அதற்கு நான், "சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் இளம் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரையில் ஏராளமானோர் பணிபுரிகிறார்கள். இத்தகைய விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால், அரசு, அம்மக்களுக்கென மாற்று தொழிற்சாலைகளை அந்த பகுதியிலே உருவாக்கி, அவர்களுக்கெல்லாம் வேலைவாய்ப்பினை உருவாக்கினால், காலப்போக்கில் இத்தகைய விபத்துகளை தடுக்கலாம். காலப்போக்கில் பட்டாசு தொழிற்சாலைகளும் மூடப்படலாம்." என்று நான் தெரிவித்தேன்.

ஆனால், எனது பேட்டியை திரித்தும் - மாற்றியும் வெளியிட்டிருப்பதால், சிவகாசி பகுதி மக்களிடையே ஒரு தவறான எண்ணம் உருவாக்கப்பட்டிருப்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதற்கான விளக்கமே இது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.