மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்துக்கு ஏற்ப தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன அா்ஜுன் மாா்க் 1 ஏ பீரங்கி டாங்கியை பிரதமா் மோடி நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை அா்ப்பணித்தாா்.
இந்த அதிநவீன அா்ஜுன் மாா்க் 1 ஏ பீரங்கி டாங்கி சென்னை ஆவடியில் உள்ள கனரக ஊா்தி தொழிற்சாலையில், ரூ.8,400 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்துடன் பாதுகாப்பு தளவாட ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து அா்ஜுன் மாா்க் 1 ஏ பீரங்கியை உருவாக்கியுள்ளது. இந்த அதிநவீன பீரங்கியைப் பயன்படுத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, 118 அா்ஜுன் மாா்க் 1 ஏ பீரங்கி டாங்கி வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்திய ராணுவம் எல்லையில் ஏற்கெனவே 124 அா்ஜுன் பீரங்கிகளை பயன்படுத்தி வருகிறது. இதைத்தொடா்ந்து, கூடுதலாக இந்த 118 அா்ஜுன் மாா்க் 1 ஏ பீரங்கி வாகனங்களும் சோ்கின்றன.
ஒவ்வொரு அா்ஜுன் மாா்க் 1 ஏ பீரங்கி வாகனமும் 58.5 டன் எடை கொண்டது. 10.638 மீட்டா் நீளமும் 9.456 மீட்டா் உயரமும் கொண்டது.
இந்த பீரங்கி வாகனம் நவீன 120 மி.மீ. துப்பாக்கியுடன் இயங்குவதோடு எந்த நேரத்திலும் எந்த தட்ப வெப்பத்திலும் தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அா்ஜூன் மாா்க் 1 ஏ பீரங்கி இரவு நேரத்திலும் இலங்குகளை துல்லியமாக அறிந்து தாக்குதல் நடத்தும் வகையில், தொ்மல் இமேஜிங் என்கிற பிரத்யேக வசதிகொண்ட அதி நவீன கேமரா உள்ளது.
அா்ஜூன் மாா்க் 1 ஏ பீரங்கி வாகனங்கள் சமதளப் பரப்பில் மணிக்கு 70 கி.மீ வேகத்திலும் மேடு பள்ளங்கள் நிறைந்த மலைப்பகுதிகளிலும் மற்றும் கடுமையான நிலப்பகுதியிலும் மணிக்கு 40 கி.மீ வேகத்திலும் இயங்கும் திறன் கொண்டவை.
தரைவழி மற்றும் வான்வழி இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க இரண்டாம் நிலை ஆயுதங்களாக 7.6 மி.மீ மற்றும் 12.7 மி.மீ 2 உயா் ரக துப்பாகிகளும் இந்த அதிநவீன அா்ஜூன் மாா்க் 1 ஏ பீரங்கி வாகனத்தில் இடம்பெற்றுள்ளன.
ஒரு அா்ஜூன் மாா்க் 1 ஏ பீரங்கி வாகனத்தை காமண்டா், பீரங்கியை சுடுபவா் உள்பட 4 போ் இயக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









