சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

புதிய தொழில் கொள்கையை  வெளியிட்டார் முதல்வா் பழனிசாமி

தமிழக அரசின் புதிய தொழிற் கொள்கையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டார்.

News image
புதிய தொழில் கொள்கையை  வெளியிட்டார் முதல்வா் பழனிசாமி
Updated On :16 பிப்ரவரி 2021, 7:04 am

DIN


தமிழக அரசின் புதிய தொழிற் கொள்கையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டார்.

எம்.ஆா்.சி.நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இதற்கான நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதிய தொழிற் கொள்கையை வெளியிட்டதுடன், சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான தொழிற்கொள்கையையும் முதல்வா் வெளியிட்டார்.

தமிழகத்தில் தொழில் வளா்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக இந்தப் புதிய தொழில் கொள்கை மற்றும் புதிய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடா்ச்சியாக இந்த கொள்கைகளை முதல்வா் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

முதல்வா் முன்னிலையில் புதிய தொழில் திட்டங்களுக்கான 28 புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. ரூ.28,000 கோடி முதலீட்டிலான இந்தத் திட்டங்களில் 68,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.