இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சீர்காழி: கணவர் மது அருந்துவதால் மனமுடைந்த மனைவி தற்கொலை

சீர்காழியில் கணவர் தினமும் மது அருந்தி வருவதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
சீர்காழி:கணவர் மது அருந்துவதால் மனமுடைந்த மனைவி தற்கொலை
Updated On :16 பிப்ரவரி 2021, 5:27 am

DIN

சீர்காழி: சீர்காழியில் கணவர் தினமும் மது அருந்தி வருவதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியைச் சேர்ந்தவர் ரகுவீர் (35). இவருக்கும் திருச்சி திருவெறும்பூர் கைலாசபுரம் பகுதியை சேர்ந்த சௌந்தரபாண்டியன் மகள் புவனேஸ்வரி ( 32 ) என்பவருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். 

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு  ரகுவீர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி புவனேஸ்வரியிடம் தகராறு செய்து வந்தாராம்.  இதனால் கணவன் மனைவியிடையே மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புவனேஸ்வரியின் தாயார் மகாலட்சுமி சீர்காழிக்கு வந்து கணவன் - மனைவியை சமாதானம் செய்து விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் ரகுவீர் நேற்று மீண்டும் மதுகுடித்து விட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி இரவு புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீர்காழி காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.