புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நாளை பொறுப்பேற்கிறார் தமிழிசை

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நாளை பொறுப்பேற்கவுள்ளார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் (கோப்புப்படம்)
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் (கோப்புப்படம்)

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நாளை பொறுப்பேற்கவுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழிசை சௌந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தது. 

இதனிடையே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை முதல்வர் நாராயணசாமி கடந்த 10-ம் தேதி நேரில் சந்தித்து, துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும் என புகார் மனு அளித்தார்.

பின்னர் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி நீக்கப்பட்டார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நாளை பொறுப்பேற்கிறார்.

நாளை காலை 9 மணிக்கு நடைபெறும் விழாவில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழிசை செளந்தரராஜனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com