தமிழில் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்பது நீண்ட கால கனவு: தமிழிசை
தமிழில் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்பது தனது நீண்ட கால கனவு என புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.


புதுச்சேரி: தமிழில் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்பது தனது நீண்ட கால கனவு என புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
புதுவை யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பதவி வகித்த கிரண்பேடி, அந்தப் பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.
இதையடுத்து, மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன், புதுவை துணைநிலை ஆளுநா் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பாா் என குடியரசுத் தலைவா் மாளிகை அறிவித்தது.
இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு மற்றும் ரகசிய பாதுகாப்பு உறுதிமொழியை தமிழில் எடுத்துக்கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதவியேற்ற பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழில் பதிவிப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு. தமிழில் உறுதிமொழி எடுக்கவும், தமிழில் பேசவும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த இறைவனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தமிழிசை கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...