47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார். 

News image
புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றுக்கொண்டார். 
Updated On :18 பிப்ரவரி 2021, 4:58 am

DIN


புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார். 

கடந்த 2016, மே 28-ஆம் தேதி முதல் புதுவை யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பதவி வகித்த கிரண்பேடி, அந்தப் பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

இதையடுத்து, மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன், புதுவை துணைநிலை ஆளுநா் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பாா் என குடியரசுத் தலைவா் மாளிகை அறிவித்தது.

இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். 

அவருக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழிசை சௌந்தரராஜன்  பதவியேற்பு மற்றும் ரகசிய பாதுகாப்பு உறுதிமொழியை தமிழில் எடுத்துக்கொண்டார். 

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.