தம்மம்பட்டியில் கோயில் பூசாரி கோயிலுக்குள் தற்கொலை
தம்மம்பட்டி பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள முருகன் கோயிலில் கோயில் பூசாரி தற்கொலை செய்து கொண்டார்.


தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள முருகன் கோயிலில் கோயில் பூசாரி தற்கொலை செய்து கொண்டார்.
தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குச் சொந்தமாக முருகன் கோயில் உள்ளது. இதற்கு பூசாரியாக இருந்தவர் நிர்மல் (35). இவர் அண்மையில் இரு சக்கர வாகனத்தை புதியதாக, வாங்கியுள்ளார். அதற்கான தொகையை சுய உதவிக் குழுக்களிடையே கடனாக பெற்றுத் தந்துள்ளார்.
இந்நிலையில், வாகனத்திற்கான கடன் தொகையை பல மாதங்களாக திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. அதற்குரிய பணத்தை திரும்ப செலுத்தச் சொல்லி சுய உதவிக் குழுவினர், புதன்கிழமை நிர்மலுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். அதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிர்மல், அவர், பூசாரியாக இருந்து வந்த கோயிலில் புதன்கிழமை நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை 10 மணி வரை, கோயில் திறக்கப்படாததால் கோயில் நிர்வாகிகள், கோயிலினுள் சென்ற போது, நிர்மல் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரிய வந்தது.
சிலர், இந்நிகழ்வை மாரடைப்பு எனக் கூறி மறைக்கப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப் குமாருக்கு, தகவல் கிடைத்தது. அதனையடுத்து சேலம் எஸ்.பி. தீபா கனிகர், உத்தரவின் பேரில், தம்மம்பட்டி காவல்துறை வழக்கு பதிந்து, உடலை மீட்டு, கோயில் நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...