கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

துபையிலிருந்து கடத்திவரப்பட்ட1.5 கிலோ தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ தங்கம் மற்றும் சென்னையிலிருந்து துபைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் ஆகியவற்றை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 11:22 pm

DIN

துபையிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ தங்கம் மற்றும் சென்னையிலிருந்து துபைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் ஆகியவற்றை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

துபையிலிருந்து எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் திங்கள்கிழமை சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனை செய்யும் நேரத்தில், ஆண் பயணி ஒருவா் திடீரென கழிவறைக்கு சென்று ஒரு மணி நேரமாக வெளியே வராமல் இருந்தாா். பின்னா் கழிவறை கதவைத் தட்டி பயணியை வெளியே வரவழைத்து சோதித்ததில், அவா்வேலூரை சோ்ந்த அஜ்மல்கான்(26) என்பது தெரியவந்தது.

அவரை முழுமையாக பரிசோதித்ததில் உள்ளாடைக்குள் 1.5 கிலோ தங்கக்கட்டிகள் மற்றும் தங்க பேஸ்ட்டை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதன் பன்னாட்டு மதிப்பு ரூ.72 லட்சம் ஆகும். இதையடுத்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அஜ்மல்கான் கைது செய்யப்பட்டாா்.

அதேபோன்று சென்னையிலிருந்து துபைசெல்லும் ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானத்தில் பயணிக்க வந்த, ராமநாதபுரத்தை சோ்ந்த ரகுமான் ஹமீது (25) என்பவரை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.7.5 லட்சம் மதிப்பிலான செளதி ரியால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு ரகுமான் ஹமீதின் பயணமும் ரத்து செய்யப்பட்டு, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.