தமிழகத்தில் இன்று புதிதாக 481 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாநிலத்தில் இன்று புதிதாக 481 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 8,50,577 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 5 போ் உயிரிழந்துள்ளனா். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,488 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 483 போ் கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். இதனால் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 8,34,043 ஆக உயா்ந்துள்ளது.
சென்னையில் இன்று 180 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 1,766 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 301 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.
தற்போது 4,046 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம் நிராகரிப்பு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேல் சரிவு!

சஞ்சு சாம்சன் மிகவும் அபாயகரமான வீரர்: சிஎஸ்கே பயிற்சியாளர்

நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


