அருப்புக்கோட்டை அருகே கார்கள் மோதல்: ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பலி, 6 பேர் காயம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழிச்சாலையில் சனிக்கிழமை பிற்பகலில் கார் ஒன்று நிலைதடுமாறி எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்திற்குள்ளானது.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழிச்சாலையில் சனிக்கிழமை பிற்பகலில் கார் ஒன்று நிலைதடுமாறி எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இவ்விபத்தில் அருப்புக்கோட்டை மின்வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பலியானார். மேலும் 6 பேர் படுகாயமடைந்து சிகிச்சையிலுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தைச் சேர்ந்தவர் பாசில்(53). இவர் தனது மருமகளான ஹலிமாபாகிலை வெளிநாடு செல்வதற்காக மதுரை விமானநிலையத்திற்குக் கொண்டுவிடத் தனது குடும்பத்தார் மற்றும் ஓட்டுநர் உள்பட 5 பேருடன் சனிக்கிழமை நண்பகலில் ஒரு காரில் கிளம்பிச் சென்றாராம். அந்தக் காரை அபுபக்கர் கபீர் என்பவர் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் அவர்கள்சென்ற காரானது பந்தல்குடி புறவழிச்சாலையில் கொப்புசித்தம்பட்டிவிலக்கு அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியதுடன், சாலை மையத்தடுப்புச்சுவரின்மீது பலமாக மோதியதாம்.
இதில் அந்தக்கார் தூக்கி வீசப்பட்டு எதிர்ப்புறச் சாலையில் சென்று விழுந்ததாம். அதேவேளையில் அப்பகுதியில், எதிர்ச்சாலையில், அருப்புக்கோட்டை மின்வாரிய குடியிருப்பைச்சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியரான பால்ராஜ்(63)என்பவரும் அக்காரின் ஓட்டுநர் உள்பட இருவர் வந்த காரானது காயல் பட்டினத்திலிருந்து வந்து தடம்புரண்ட காருடன் பலமாக மோதி விபத்திற்குள்ளானது.
இவ்விபத்தில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இரு கார்களிலுமிருந்தும், படுகாயமடைந்த மொத்தம் 6 பேரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த பந்தல்குடி காவல்துறையினர்,விபத்திற்கான காரணம் குறித்து இரு கார்களின் ஓட்டுநர்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...