புதிய கல்வியாண்டில் பள்ளிகளைத் திறக்க விருப்பம்
ஏப்ரல் மாதம், புதிய கல்வியாண்டில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று நாடு முழுவதும் 69 சதவீத பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


ஏப்ரல் மாதம், புதிய கல்வியாண்டில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று நாடு முழுவதும் 69 சதவீத பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு குறித்து தனியார் நிறுவனமொன்று நாடு முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் 19,000 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஏப்ரல் மாதத்தில் அல்லது பள்ளிகள் திறப்புக்கு முன்னர், தடுப்பூசிகளைத் தங்களின் குழந்தைகளுக்குச் செலுத்த 26 சதவீதப் பெற்றோர் மட்டுமே முன்வந்துள்ளனர்.
56 சதவீதம் பேர் 3 மாதங்கள் அல்லது அதற்கும் மேலாகவே காத்திருப்பதாகவும், தடுப்பூசி குறித்த தரவுகள் மற்றும் கண்டுபிடிப்புகளைக் கருத்தில் கொண்டு தடுப்பூசிகளை தங்களின் குழந்தைகளுக்குச் செலுத்தலாம் என்று கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் 69 சதவீத பெற்றோர், கரோனா சூழல் மற்றும் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாதம் தொடங்கும் புதிய கல்வியாண்டில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...