செய்யாறில் அதிமுக நிர்வாகிகளுக்கு வேட்டி, சேலை: எம்.எல்.ஏ.தூசி.கே.மோகன் வழங்கினார்
செய்யாறு தொகுதி அதிமுக நிர்வாகிகள் 1650 மகளிர் உள்பட 5500 பேருக்கு வேட்டி, சேலையை எம்.எல்.ஏ. தூசி.கே.மோகன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.


செய்யாறு தொகுதி அதிமுக நிர்வாகிகள் 1650 மகளிர் உள்பட 5500 பேருக்கு வேட்டி, சேலையை எம்.எல்.ஏ. தூசி.கே.மோகன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
ஆங்கில வருடப் பிறப்பு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு செய்யாறு தொகுதியில் உள்ள பிற அணி நிர்வாகிகள் உள்பட அதிமுக நிர்வாகிகளான 1,650 மகளிர் உள்பட 5,500 பேருக்கு வேட்டி, சேலை, காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்யாறு தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், எம்.எல்.ஏ வு மான தூசி.கே.மோகன் தலைமைத் தாங்கி சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான வேட்டி, சர்ட், சேலை, துண்டு, காலண்டர் என வழங்கி அதிமுக நிர்வாகிகளுக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கி பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் செய்யாறு தொகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றி அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் எம்.மகேந்திரன், எம்.அரங்கநாதன், வே.குணசீலன், சி.துரை, நகர செயலாளர் ஏ.ஜனார்த்தனம், நகர அம்மா பேரவை செயலாளர் கே.வெங்கடேசன், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.குமரேசன், மாவட்ட அதிமுக நிர்வாகிகள், டி.பி.துரை, வெம்பாக்கம் ரமேஷ், எஸ்.ரவிச்சந்திரன், ஏ.அருணகிரி, பூக்கடை.ஜி.கோபால், கோவிந்தராஜூ, ரமேஷ், பிற அணி நிர்வாகிகள் செபாஸ்டின் துரை, பழனி, ஏ.வி.சேகர், பிரகாஷ், சுதாகர், ராஜேஷ்குமார், மகாதேவன், தணிகாசலம், அபிராமி.சுரேஷ், சந்தோஷ்குமார், கந்தசாமி, சுரேஷ், எழில், தவசி.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...