கூத்தாநல்லூர் இலவச சிறப்பு மருத்துவ முகாமில் 953 பேருக்கு பரிசோதனை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் புள்ளமங்கலம் ஊராட்சியில், நடைபெற்ற சிறப்பு மருத்துவ  முகாமில், 41 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர்கள் மூலம் 953 பேர் பரிசோதனைகள் செய்து கொண்டனர்.  
மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மன்னார்குடி ஒன்றியக் குழுத் தலைவர் டி.மனோகரன்.
மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மன்னார்குடி ஒன்றியக் குழுத் தலைவர் டி.மனோகரன்.
Updated on
1 min read

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் புள்ளமங்கலம் ஊராட்சியில், நடைபெற்ற சிறப்பு மருத்துவ  முகாமில், 41 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர்கள் மூலம் 953 பேர் பரிசோதனைகள் செய்து கொண்டனர்.  

புள்ளமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் பொறுப்பேற்று இரண்டாம் ஆண்டின் தொடக்க விழாவை முன்னிட்டு, அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சிறப்பு முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு, ஒன்றியக் குழு உறுப்பினர் அய்.வி.குமரேசன் தலைமை வகித்தார். மாவட்டப் பிரதிநிதி செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் பானுமதி கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிறப்பு மருத்துவ முகாமை, மன்னார்குடி ஒன்றியக் குழுத் தலைவர் டி.மனோகரன் குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்தார். முகாமில்,கண், பல் சம்பந்தப்பட்ட நோய்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தையின் வளர்ச்சி குறித்து சோதனை, இருதய நோய் மற்றும் வயது முதிர்வில் ஏற்படும் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர்.

உள்ளிக்கோட்டை வட்டார அரசு மருத்துவ அலுவலர் மருத்துவர் அபூவ தமிழன் தலைமையில், மருத்துவர்கள் தமிழ் வேல், விக்னேஷ், சர்மிளா, மஞ்சுளா தேவி உள்ளிட்ட 16 மருத்துவர்கள் மற்றும் 24 செவிலியர்களுடன், 953 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. முகாமில், கண் அறுவை சிகிச்சைக்காக 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருவருக்கு வாயில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 17  கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தையின் வளர்ச்சி குறித்து பார்க்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை, உள்ளிக்கோட்டை சுகாதார ஆய்வாளர் சி. செல்வவிநாயகம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பொ) ஆர்.வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள் கவனித்தனர்.ஒன்றியக் குழு உறுப்பினர் பரம வினாதா சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com