

பூசணிக்காயை வைத்து அருமையான பொரியல் செய்யலாம்.
தேவையானவை:
பெரிய துண்டுகளாக நறுக்கிய பூசணிக்காய் - 1 கிண்ணம், மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி, மிளகாய் வற்றல் - 3, உப்பு - தேவையான அளவு, தேங்காய்த் துருவல் - 3 மேஜைக்கரண்டி, தாளிக்க - எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி , கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர், நறுக்கி வைத்துள்ள பூசணிக்காய், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். நன்கு வெந்ததும். தேங்காய்த் துருவலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான பூசணிக்காய் பொரியல் ரெடி. சாம்பார் சாதம், புளிக்குழம்பு சாதம், ரசம் சாதம், ஆகியவற்றுக்குப் பரிமாறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...


