இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “முதுநிலை சட்டப் படிப்பிற்கு (எல்.எல்.எம்) இனிமேல் நீட் தேர்வு போன்று அகில இந்திய நுழைவுத் தேர்வு” என இந்திய பார்கவுன்சில் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை பறித்து விட்ட மத்திய பா.ஜ.க அரசு இப்போது, “இந்திய பார் கவுன்சில்” மூலமாக சட்டக் கல்வியையும் கிராமப் புற மாணவர்களுக்கு எட்டாக் கனியாக்கி விலக்கி வைக்கும் விதத்தில் இந்தத் தேர்வினை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து- அதற்காக அரசிதழும் வெளியிட்டிருப்பது மாநில உரிமைகளுக்கும்- கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.