புதுச்சேரி துணைநிலை ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினா் எம்என்எஸ்.வெங்கட்ராமன் தலைமையில் வகித்தாா். அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினா்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் உள்பட பலா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளாக மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை, சுயேச்சையாக செயல்பட விடாமல் தடுக்கப்பட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டத்தை ஒழித்துக் கட்டி நிரந்தரமாக ரேஷன் கடைகளை மூடிடவும் முனைப்புடன் செயல்படுகிறாா். அரசு அனுப்பிய இலவச அரிசி வழங்கல் உள்பட 30-க்கும் மேற்பட்ட கோப்புகளை முடக்கியுள்ளாா். ஆளுநரின் தன்னிச்சையான, ஜனநாயக விரோத, மக்களின் உரிமைகளை பறிக்கும் போக்கினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அவரை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.