பொதக்குடி பாத்திமா பள்ளிவாயில் ரூ.20 லட்சத்தில் சீரமைப்பு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த பொதக்குடியில், பாத்திமா பள்ளிவாயில் ரூ.20 செலவில் சீரமைப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. 
பொதக்குடி பாத்திமா பள்ளிவாயில் ரூ.20 லட்சத்தில் சீரமைப்பு
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த பொதக்குடியில், பாத்திமா பள்ளிவாயில் ரூ.20 செலவில் சீரமைப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. 

பொதக்குடி பாத்திமா பள்ளிவாயில் சீரமைப்பு நிறைவடைந்து, பயன்பாட்டிற்கான விழா நடைபெற்றது. விழாவில், பாத்திமா பள்ளி வாயில் இமாம் கே.ஆர்.முஹம்மது கெளஸ் கனி கிராஅத் நடத்தினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவிற்கு, தஞ்சை ஓரியண்டல் டவர்ஸ் தலைவர் சர்புதீன் தலைமை வகித்தார். பொதக்குடி ஊர் உறவின் முறை ஜமாஅத் நிர்வாக சபை அறப்பணிச் சங்கத் தலைவர் எஸ்.ஏ. மஹதூம் மைதீன், முத்தவல்லிகள் பெரியப்பள்ளி வாயில் பி.எம்.ஷாஜஹான், மேலப்பள்ளி வாயில் பி.எம்.ஏ.குத்புதீன், புதுமனைப் பள்ளி வாயில் எஸ்.டி.ஏ.ஜியா வுதீன், பாத்திமா பள்ளி வாயில் செயலாளர் ஏ.அப்துல் ஜலீல், ஜன்னத்துல் பிர்தெளஸ் பள்ளி வாயில் செயலாளர் பி.எம்.அமானுல்லா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

பாத்திமா பள்ளி வாயில் பொருளாளர் எம்.ஏ.ஜெ. முஹம்மது இக்பால் வரவேற்றார். விழாவில், ஊர் உறவின் முறை ஜமாஅத் நிர்வாக சபை அறப்பணிச் சங்க செயலாளர் எம்.எம்.ரஃப்யுதீன் கட்டடப் பணி குறித்து பேசியது,

பாத்திமா பள்ளி வாயில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீரமைப்பு செய்யப்பட்டுள்ள கட்டடத்தில், மேல் தளத்தில் உள்ள சமுதாய கூடத்தில், சுப நிகழ்ச்சிகள், வைபவங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் வருவாய் கிடைப்பதற்குரிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றார். விழாவில், செயலாளர்கள் மேலப்பள்ளி வாயில் முஹம்மது ரப்பானி, புதுமனை பள்ளிவாயில் நூர் முஹம்மது, இமாம்கள் பெரியப் பள்ளிவாயில் பி.ஹெச்.ஸலாஹுதீன், மேலப்பள்ளி வாயில் என்.எஸ்.அபுல் ஹசன், ஊர் உறவின்முறை ஜமாஅத் நிர்வாக சபை அறப்பணிச் சங்கப் பொருளாளர் எம்.எம்.ஜெ.பதருல் ஜமான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிறைவாக, பாத்திமா பள்ளிவாயில் முத்தவல்லி பி.எம்.டி.ஜெய்னுல்லா புதீன் நன்றி கூறினார். முன்னதாக காலையில், இளையான்குடி ஒளி மலர்கள் ஆலிமாக்கள் குழு நிர்வாகி ஏ.யாஸ்மீன் ஆலிமா பெண்கள் பயான் நடத்தினார். விழா ஏற்பாடுகளை, பாத்திமா பள்ளிவாயில் நிர்வாகிகள் கவனித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com