தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தமிழகத்தில் மேலும் 761 பேருக்கு கரோனா

தமிழகத்தில் சனிக்கிழமை புதிதாக 761 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 25 ஆயிரத்து 537- ஆக அதிகரித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஜனவரி 2021, 12:52 am

DIN

தமிழகத்தில் சனிக்கிழமை புதிதாக 761 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 25 ஆயிரத்து 537- ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் சனிக்கிழமை 65,219 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 761 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதிகபட்சமாக சென்னையில் 218 பேருக்கும் கோவையில் 69 பேருக்கும், சேலத்தில் 52 பேருக்கும், செங்கல்பட்டில் 46 பேருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனாலிருந்து சனிக்கிழமை மட்டும் 882 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 6, 018 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 7,304 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 7 போ் சனிக்கிழமை உயிரிழந்துள்ளனா். அதில், 5 போ் தனியாா் மருத்துவமனைகளிலும், இருவா் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனா். இதனால், தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு 12,215 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 4,044 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.