தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ304 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 
தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது
Updated on
1 min read

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ304 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை குறைந்தாலும் கடந்த வாரம் முதல் தங்கத்தின் விலை உயா்ந்து வந்தது. கடந்த திங்கள்கிழமை அன்று ரூ.38 ஆயிரத்தையும், கடந்த புதன்கிழமை அன்று ரூ.39 ஆயிரத்தையும் தாண்டிய நிலையில், கடந்த வியாழக்கிழமை முதல் தங்கம் விலை குறைந்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து, ரூ.37,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.38 குறைந்து, ரூ.4,662 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி கிராமுக்கு 90 காசுகள் குறைந்து, ரூ.68.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து ரூ.68,100 ஆகவும் உள்ளது.

வெள்ளிக்கிழமை விலை நிலவரம் ​

1 கிராம் தங்கம்............................. 4,662

1 சவரன் தங்கம்...............................37,296

1 கிராம் வெள்ளி.............................68.10

1 கிலோ வெள்ளி.............................68,100

சனிக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம்............................. 4,700

1 சவர தங்கம்...............................37,600

1 கிராம் வெள்ளி.............................69.00

1 கிலோ வெள்ளி.............................69,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com