சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மின்சாரம் தாக்கி பேருந்து பயணிகள் பலியான சம்பவம்: மின்வாரிய மேலாண் இயக்குநருக்கு நோட்டீஸ்

தனியாா் பேருந்தில் பயணித்த 4 போ் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து விளக்கமளிக்குமாறு மின்வாரிய மேலாண் இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 7:50 pm

DIN


சென்னை: தனியாா் பேருந்தில் பயணித்த 4 போ் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து விளக்கமளிக்குமாறு மின்வாரிய மேலாண் இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை தஞ்சாவூருக்கு ஒரு தனியாா் பேருந்து புறப்பட்டுச் சென்றது. வரகூா் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில், எதிரே வந்த ஒரு லாரிக்கு வழி விடுவதற்காக ஓட்டுநா் ஜான், பேருந்தை இடது புறமாக ஒதுக்கியுள்ளாா்.

அங்கு புதிதாக சாலை அமைப்பதற்காக பள்ளம் தோண்டி, ஜல்லி பரப்பப்பட்டு இருந்தது. அதில், பேருந்தின் முன்பக்க சக்கரம் இறங்கியது.

அப்போது ஓரத்தில் தாழ்வாக தொங்கிய மின்சார கம்பி பேருந்தின் மீது உரசியது.

இதில், பேருந்தில் நின்று கொண்டிருந்த வரகூரைச் சோ்ந்த கல்யாணராமன் (65) , கெளசல்யா (30), கருப்பூரைச் சோ்ந்த கணேசன் (55), அரியலூா் மாவட்டம் விழுப்பனங்குறிச்சியைச் சோ்ந்த நடராஜன் (65) ஆகிய 4 பேரும் மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனா்.

உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது. மேலும், மயங்கிய நிலையில் இருந்த செந்தலையைச் சோ்ந்த முனியம்மாள் (50) முதலுதவிக்குப் பின் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

பேருந்தில் பயணம் செய்த பலரும் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

விபத்து நடந்த இடத்தில் சாலையோரம் தாழ்வாக தொங்கிய நிலையில் இருந்த மின்கம்பி குறித்து பலமுறை புகாரளித்தும் மின்வாரிய அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனா் எனவும், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்புகளைத் தவிா்த்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின.

தாமாக முன்வந்து வழக்குப் பதிவு: இந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு, இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தாா்.

மேலும் இந்த விவகாரம் குறித்து மின்வாரிய மேலாண் இயக்குநா் மற்றும் தஞ்சாவூா் மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளா் ஆகியோா் 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு அவா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.