

பொங்கல் பண்டிகையையொட்டி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்பட காண்பதற்காக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கைலாஷ் திரையரங்கு முன்பு ரசிகர்கள் திரண்டனர்.
கரோனா நோய்தொற்று அச்சுறுத்தலால் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே திரையரங்குகள் செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் குறிப்பிட்ட சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளும் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கைலாஷ் திரையரங்கு முன்பு மாஸ்டர் திரைப்படத்தைக் காண புதன்கிழமை அதிகாலையில் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
படம்: வே.சக்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.