நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் உடல் நாளை தகனம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகன் உடல் நாளை (ஜன.16)  தகனம் செய்யப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

த.மா.கா. துணைத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் காலமானார்

Updated On :15 ஜனவரி 2021, 6:44 pm IST

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகன் உடல் நாளை (ஜன.16)  தகனம் செய்யப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த பி.எஸ். ஞானதேசிகன், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த நவம்பர் 11-ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜன. 15) அவர் காலமானார்.

அவரது மறைவுக்கு ஏராளமான கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே ஞானதேசிகன் உடல் நாளை தகனம் செய்யப்படவுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஞானதேசிகன் மறைவையொட்டி 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

துக்கம் அனுசரிக்கும் விதமாக கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.