நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையநல்லூரில் அதிமுக ஆர்ப்பாட்டம் 

திமுகவைக் கண்டித்து தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அதிமுக சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கடையநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.

Updated On :16 ஜனவரி 2021, 10:19 am

DIN

திமுகவைக் கண்டித்து தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அதிமுக சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக முதல்வரையும், பெண்களையும் தரக்குறைவாக விமர்சித்து வரும் திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கடையநல்லூர் நகரச் செயலர் எம்.கே.முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர்கள் செல்லப்பன், முத்து பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி வடக்கு மாவட்டச் செயலர் கிருஷ்ணமுரளி கண்டன உரையாற்றினார். முன்னாள் நகரச் செயலர் கிட்டுராஜா, நகர பொருளாளர் அழகர்சாமி, வார்டு செயலர் பழனிச்சாமி, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் முத்துகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி துணை செயலர் கருப்பையாதாஸ், நகர இளைஞரணி செயலர் ராஜேந்திர பிரசாத், ராசி சரவணன், ஜெயலலிதா பேரவை செயலர் முத்தையா பாண்டியன், சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவை செயலர் மைதின், சொக்கம்பட்டி குட்டிராஜா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.