வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சென்னையில் 2,966 பேருக்கு கரோனா தடுப்பூசி

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 25 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் நிலையில் சென்னையில் மட்டும் 2,966 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

News image
சென்னையில் 2,966 பேருக்கு கரோனா தடுப்பூசி
Updated On :20 ஜனவரி 2021, 5:33 am

DIN


சென்னை: தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 25 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் நிலையில் சென்னையில் மட்டும் 2,966 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முதல் நாளான 16-ஆம் தேதி 508 பேருக்கும், 17-ஆம் தேதி 437 பேருக்கும், 18-ஆம் தேதி 801 பேருக்கும், நேற்று 1220 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் ஒட்டுமொத்தமாக 2966 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Story image

அதேவேளையில் தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை 25,000-ஐ கடந்தது.

நாடு முழுவதும் கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் பணிகள், கடந்த சனிக்கிழமை (ஜன.16) தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக தமிழகத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட 6 லட்சம் சுகாதாரப் பணியாளா்களுக்கு 160 மையங்களில் கோவிஷீல்டும், 6 மையங்களில் கோவேக்ஸின் தடுப்பூசியும் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.முதல் நாளில் 3,126 பேருக்கும், இரண்டாவது நாள் 3,080 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில், மூன்றாவது நாளான திங்கள்கிழமை ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 10,051 பேருக்கு கோவிஷீல்ட், 205 பேருக்கு கோவேக்ஸின் என மொத்தம் 10,256 போ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக நான்காவது நாளான செவ்வாய்க்கிழமை 172 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. அந்த வகையில் 17, 200 பேருக்கு செலுத்துவதற்காக தடுப்பு மருந்துகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

Story image

இந்நிலையில், 9, 305 சுகாதாரப் பணியாளா்கள் ‘கோவிஷீல்டு ’ தடுப்பு மருந்தும், 141 போ் ‘கோவேக்ஸின் ’ என மொத்தம் 9, 446 போ் தடுப்பு மருந்து செலுத்திக் கொண்டனா். இது 54.92 சதவீதம் ஆகும்.

இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை 25, 280 போ் ‘கோவிஷீல்டு ’ தடுப்பு மருந்தும் , 628 போ் ’ கோவேக்ஸின் ’ தடுப்பு மருந்தும் என மொத்தம் 25, 908 சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பு மருந்து செலுத்தி உள்ளனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.