மழை பாதிப்பு : ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் கேட்டு சாலை மறியல்

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. 
கோட்டூரில் சாலையில் எரிவாயு உருளை அடுப்பு வைத்து சமையல் செய்து சாலை மறியலில் ஈடுப்படும் சிபிஐ மற்றும் விவசாய சங்கத்தினர்.
கோட்டூரில் சாலையில் எரிவாயு உருளை அடுப்பு வைத்து சமையல் செய்து சாலை மறியலில் ஈடுப்படும் சிபிஐ மற்றும் விவசாய சங்கத்தினர்.


திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ,கோட்டுர் பகுதியில், டிசம்பர் மாதம் நிவர் மற்றும் புரெவி புயல் என அடுத்தடுத்து பெய்த கனமழையால் பயிரிடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் வயலில் தேங்கி நிற்கும் மழை நீரில் மூழ்கி அழுகி சேதமடைந்து விளைச்சல் முழுமையாக  பொய்து போனதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருப்பதுடன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சவளக்காரனில் சாலையில் விறகு அடுப்பு வைத்து சமையல் செய்து சாலை மறியவில் ஈடுப்பட்ட சிபிஐ மற்றும் விவசாய சங்கத்தினர்.

இதனையடுத்து , தொடர் மழையால் பாதிப்படைந்த சம்பா , தாளடி நெல் பயிற்களுக்கு பாராபட்சமின்றி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் . கூட்டுறவு , தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட விவசாயக் கடன் அனைத்தையும் நிபந்தனையின்றி தள்ளுப்படி செய்ய வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்யத அனைவருக்கும் முழுமையான இழப்பீடு தொகையை தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும். மழையால் வேலை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

இக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் , தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் சார்பில், புதன்கிழமை மன்னார்குடி நகரத்தில் பேருந்து நிலையம், கீழப்பாலத்திலும், ஒன்றியத்தில் சவளக்காரன், காசாங்குளம், பாரதி மூலங்குடி, கோட்டூர் ஒன்றியத்தில் கோட்டூர் , திருப்பத்தூர் , தட்டாங்கோவில், ஒரத்தூர், பெருக வாழ்ந்தான், திருமக்கோட்டை, சேந்தங்குடி என மொத்தம் 12 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கோட்டூர் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் மறியலில் சிபிஐ மாவட்டச் செயலர் வை.சிவபுண்ணியம் கலந்து கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com