தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மீனவர்களைப் பாதுகாக்க கச்சத்தீவு அருகே இந்திய கடற்படை கப்பல்களை நிறுத்த வேண்டும்: மீனவ சங்கம் கோரிக்கை

ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவு அருகே இந்திய கடற்படை கப்பல்களை நிறுத்த வேண்டும் என மீனவ சங்கம் பொதுச் செயலாளர் என்.போஸ் ஞாயிற்றுகிழமை கோரிக்கை விடுத்தார். 

News image
இலங்கை கடற்படை தாக்குதல் காரணமாக மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகு.
Updated On :24 ஜனவரி 2021, 10:42 am

DIN

ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவு அருகே இந்திய கடற்படை கப்பல்களை நிறுத்த வேண்டும் என மீனவ சங்கம் பொதுச் செயலாளர் என்.போஸ் ஞாயிற்றுகிழமை கோரிக்கை விடுத்தார். 

இது குறித்து என்.ஜே.போஸ் கூறுகையில், 'ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதுடன் படகை மூழ்கடித்து உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு தடுக்கப்பட்ட நிலையில் மீனவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் கப்பலை வைத்து மோதி படகை மூழ்கடித்துக் கொலை செய்கின்றனர். இதற்கு மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தினாலும் மத்திய, மாநில அரசுகள் நிரந்தத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை.

            மீனவ சங்க பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ்    

            மீனவ சங்க பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ்    

இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒரு படகை இலங்கை கடற்படையினர் கப்பல்களை வைத்து மோதி நான்கு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று அவர்களின் குடும்பங்கள் நிர்கதியாகி விட்டது. 
இந்த நிலையில், நான்கு மாவட்ட மீனவர்களை பாதுகாக்கும் வகையில் கோடியக்கரை முதல் ராமேசுவரம் வரையில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்களை நிறுத்தி இலங்கை கடற்படையினரிடம் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் இந்திய எல்லை தெரியாமல் இலங்கை கடற்பகுதிக்குள் செல்லும் போது இலங்கை கடற்படையினர் வன்முறை செய்கின்றனர். இந்திய கடற்படை கப்பல்கள் கச்சத்தீவு அருகே நிறுத்தப்பட்டால் மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க முடியும். மேலும் எல்லை தாண்டும் மீனவர்களை எச்சரிக்கை விடுப்பதுடன் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய, மாநில அரசுகள் உடனே கோடியக்கரை முதல் ராமேசுவரம் வரை கடற்படை கப்பல்கள் நிறுத்தி பாதுகாப்பு வழங்கிட வேண்டும்' என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.