மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கொள்முதல் நிலையம் திறக்கப்படுவதற்கு முன்பே நெல் மூடைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள் 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதற்கு முன்னதாகவே விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூடைகளுடன் காத்துக் கிடக்கின்றனர். 

News image
மானாமதுரை அருகே மிளகனூர் கிராமத்தில் கொள்முதல் நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னதாகவே அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூடைகள்
Updated On :29 ஜனவரி 2021, 10:45 am

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதற்கு முன்னதாகவே விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூடைகளுடன் காத்துக் கிடக்கின்றனர். 

மானாமதுரை பகுதியில் பல நூறு ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டது தொடர்ந்து பெய்த மழையினால் இப்பகுதியில் ஏராளமான ஏக்கரில் விளைந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் கவலையடைந்தனர். தற்போது விளைநிலங்களில்  தண்ணீர் வடிந்த நிலையில் எஞ்சியுள்ள விளைந்த நெற்பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.

அறுவடைக்குத் தேவையான இயந்திரங்கள் கிடைக்காததால் விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நெல் பயிர்களை அறுவடை செய்து அவற்றை சாலைகளில் உலர வைத்து பின்னர் நெல்மணிகளை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் கடந்தாண்டு மானாமதுரை பகுதியில் பல கிராமங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 

தற்போது 25க்கும் மேற்பட்ட இடங்களில் மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது கடந்தாண்டு மானாமதுரை பகுதியில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட கிராமங்களில் மீண்டும் திறப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதற்கு முன்னதாகவே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை மூடைகளில் கட்டி கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வரத் தொடங்கியுள்ளனர். மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் கிராமத்தில் திறக்கப்பட உள்ள கொள்முதல் நிலையத்திற்கு முன்னதாக விவசாயிகள் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து இரவு பகலாகக் காத்துக்கிடக்கின்றனர். 

விரைவில் மானாமதுரை பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

இதுகுறித்து மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பையா கூறியதாவது,

மழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் விளைந்த நிலையிலுள்ள அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டன. இதனால் விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்போது சேதமடைந்த விளைந்த நெற்பயிர்கள் போக மீதி  பயிர்களை அறுவடை செய்து  விற்பனைக்காகக் கொண்டு வந்துள்ளோம்.

தனியார் நெல் வியாபாரிகளிடம் கொண்டு சென்றாள் தண்ணீரில் நனைந்த நெற்பயிர்களை அடிமாட்டு விலைக்குக் கேட்கின்றனர். இதனால் அறுவடை செய்த நெல்லுடன் கொள்முதல் நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் இடங்களில் இரவு பகலாகக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.