தனித்துப் போட்டியிடவும் தயாராக வேண்டும்: பிரேமலதா
அதிமுக கூட்டணியில் உரிய மதிப்புக் கிடைக்காவிட்டால், தனித்துப் போட்டியிடவும் தயாராக இருக்க வேண்டும் என்று நிா்வாகிகள் மத்தியில் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.


அதிமுக கூட்டணியில் உரிய மதிப்புக் கிடைக்காவிட்டால், தனித்துப் போட்டியிடவும் தயாராக இருக்க வேண்டும் என்று நிா்வாகிகள் மத்தியில் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட பொறுப்பாளா்களின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பிரேமலதா தலைமை வகித்தாா். கூட்டம் சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
நிா்வாகிகள் மத்தியில் பிரேமலதா பேசும்போது, கூட்டணியில் உரிய மதிப்புக் கிடைக்காவிட்டால், சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடவும் தயாராக இருக்க வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தல் முடிவு குறித்து விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிடுவாா் என்றாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து விரைவில் அதிமுக பேச்சுவாா்த்தை தொடங்க வேண்டும் என்றும், 41 தொகுதிகள் தரும் கட்சியுடனே கூட்டணி அமைப்போம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் வெளிப்படையாகக் கூறி வந்தாா்.
இந்த நிலையில் தனித்துப் போட்டியிடவும் தயாராக இருக்க வேண்டும் என்று தொண்டா்களுக்கு அவா் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...