எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கரோனா நோய்த்தொற்று: இன்று அறிவிப்புகள் வெளியீடு

கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் மேலும் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியாக உள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :31 ஜனவரி 2021, 4:45 am

DIN

கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் மேலும் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியாக உள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க ஏற்கெனவே விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் தளா்வுகளுக்கான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

ஆட்சியா்கள்-மருத்துவ நிபுணா்: ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா நோய்த்தொற்று நிலவரம் குறித்து, மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் பழனிசாமி கடந்த வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதேபோன்று, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் அவா் ஆலோசித்தாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த முடிவுகள் அரசின் அறிவிப்புகளாக ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட உள்ளன. மத்திய அரசின் உத்தரவையேற்று, திரையரங்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் இருக்கைகளை அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.