நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விழுப்புரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: சி.வி. சண்முகம் தொடக்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருவக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில், போலியோ சொட்டு மருந்து போடும் பணியினை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் துவக்கி வைத்தார்.

News image

விழுப்புரம் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் சிவி சண்முகம் தொடங்கி வைத்தார்

Updated On :31 ஜனவரி 2021, 6:56 am

DIN

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருவக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில், போலியோ சொட்டு மருந்து போடும் பணியினை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் துவக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம், ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 1,666 மையங்களில் 1,71,604 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

திருவக்கரை பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் போலியோ சொட்டு மருந்து போடும் பணியினை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் இப்பணிகளில் சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 6,600 பேர் இடம்பெற்றுள்ளனர்.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.