தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

கூட்டணி குறித்த பேச்சை உடனடியாகத் தொடங்க வேண்டும்: பிரேமலதா

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

News image
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப்படம்)
Updated On :31 ஜனவரி 2021, 8:20 am

DIN

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ''கூட்டணி பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும். தேர்தலுக்கு குறைந்த நாள்களே இருப்பதால், கூட்டணி பேச்சுவார்த்தையை தாமதிப்பதால் யாருக்கும் பலனில்லை.

கூட்டணிப் பேச்சுவார்த்தையை அதிமுக தாமதிக்காமல் தொடங்க வேண்டும். இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் அதிமுக இருக்கிறது.

பொதுக்குழு கூட்டணி தொடர்பாக தேமுதிக செயற்குழு இறுதி முடிவு எடுக்கும். திமுக கொடுத்துவரும் பொய் வாக்குறுதிகளை மக்கள் கவனித்து வருகின்றனர்.

எந்த கட்சியும் கூட்டணி குறித்து அறிவிக்காததால் மூன்றாவது அணி குறித்து தற்போது கருத்து கூற இயலாது.

சசிலகா வருகை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சசிகலாவிற்கு எங்களது ஆதரவு உண்டு'' என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.