வாகன ஓட்டிகளே.. சிக்னலை மீறினால் செல்லிடப்பேசிக்கு செலான் வரும்
வாகன ஓட்டிகளே.. சிக்னலை மீறினால் செல்லிடப்பேசிக்கு செலான் வரும்

வாகன ஓட்டிகளே.. சிக்னலை மீறினால் செல்லிடப்பேசிக்கு செலான் வரும்

சென்னையில் அண்ணாநகர் உள்ளிட்ட முக்கியப் சிக்னல் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் சிக்னலை மீறிச் செல்வோரின் செல்லிடப்பேசிக்கு அபராதத்துக்கான செல்லான் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் அண்ணாநகர் உள்ளிட்ட முக்கியப் சிக்னல் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் சிக்னலை மீறிச் செல்வோரின் செல்லிடப்பேசிக்கு அபராதத்துக்கான செல்லான் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் அண்ணாநகர் உள்ளிட்ட முக்கிய 5 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம், சிக்னல்களில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் செல்லிடப்பேசிக்கு தானியங்கி மூலம் அபராதம் விதிக்கும் முறையை சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிலால் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், அண்ணாநகர் பகுதியில் 5 சிக்னல்களில் போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு உடனுக்குடன் போக்குவரத்து செலான்கள் அனுப்பும் போக்குவரத்து தானியங்கி கட்டுப்பாட்டறையை துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை, அண்ணாநகர் மற்றும் திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குப்ட்ட முக்கியமான சாலை சந்திப்புகளான 1.அண்ணாநகர் ரவுண்டனா, 2. அண்ணாநகர் காவல் நிலைய ரவுண்டனா, 3.சாந்தி காலனி சந்திப்பு, 4. 100 அடி சாலை மற்றும் எஸ்டேட் சாலை சந்திப்பு, 5.மேற்கு டிப்போ மற்றும் 18வது சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் 2019ம் ஆண்டு, ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்திய லிமிடெட் நிறுவனத்துடன் ஓருங்கிணைந்து 61 நவீன கேமிராக்கள் நிறுவப்பட்டு, மேற்படி 5 சிக்னல்களிலும் போக்குவரத்து விதிமீறும் வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக படம் பிடித்து, கட்டுப்பாட்டறையில் கண்காணித்து, விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமீறல் குறித்த செலான்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் மற்றும் தேசிய தகவல் மையத்துடன் ஒருங்கிணைந்து, இத்திட்டம் மேலும் நவீனப்படுத்தப்பட்டு, போக்குவரத்து விதிமீறும் வாகனங்களின் பதிவு எண்கள் கேமிராக்களில் பதிவு செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் செல்போன் எண்களுக்கு கட்டுப்பாட்டறையில் உள்ள கணினி மூலம் உடனுக்குடன் செலான்கள் அனுப்பும் முறைக்கான பணி செயல்படுத்தப்பட்டு, முடிவுற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இன்று மதியம், அண்ணாநகர் ரவுண்டனா அருகிலுள்ள போக்குவரத்து விதிமீறல் கண்காணிக்கும் அண்ணாநகர் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டறையை திறந்து வைத்து, விதிமீறலில் ஈடுபடும் வாகன உரிமையாளர்களின் செல்போன் எண்ணுக்கு தானியங்கி செலான் அனுப்பும் புதிய நடைமுறையை துவக்கி வைத்தார்.

அதன்பேரில் இன்று (01.7.2021) முதல் மேற்படி 5 சிக்னல்களிலும்,சிக்னலை மீறிச் செல்வோர் உட்பட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் கண்டறியப்பட்டு, தானியங்கி கட்டுப்பாட்டறையில் உள்ள கணினி மூலம் மேற்படி வாகனங்களின் உரிமையாளர்களின் செல்போன் எண்களுக்கு தகவல் அளித்து, செலான் அனுப்பும் முறை நடைமுறைபடுத்தப்பட்டது.

இதன் மூலம், இதுவரை வாகன எண்களைக் கொண்டு தானியங்கி முறையில் அந்த வாகனத்தின் உரிமையாளரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அபராதத்துக்கான செல்லான் அனுப்புவதில் இருந்த சிக்கல் நீக்கப்பட்டுள்ளது.

எனவே, சிக்னல்களில் அவரவர்களுக்கான வாய்ப்பு வரும் போது, சாலை விதிகளை மதித்து வாகனத்தை இயக்குவதே சாலச் சிறந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com