மருத்துவர்களுக்கு வைகோ வாழ்த்து
உலக மருத்துவர் நாளை முன்னிட்டு மருத்துவர்களுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.


உலக மருத்துவர் நாளை முன்னிட்டு மருத்துவர்களுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இன்று உலக மருத்துவர் நாள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தங்கள் உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக 24 மணி நேரமும் உழைத்து, கரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு வெற்றி கண்டு வருகின்றார்கள்.
அவர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து கடந்த ஆட்சியில் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தினார்கள்.
அந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
முதல்வர், மருத்துவரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...