அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

News image
Updated On :2 ஜூலை 2021, 12:56 am


சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  பெட்ரோல் விலை 33 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.13 காசுகளுக்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. 

அந்தவகையில் சென்னையில் பெட்ரோல் விலை 33 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.13 காசுகளுக்கு விற்பனையாகிறது.

டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் டீசல் ரூ.93.72 விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 30-க்கும் அதிகமான மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தாண்டியது.

சென்னை வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.