நீட் விலக்கு மசோதாவை பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும்: கே.எஸ்.அழகிரி
நீட் விலக்கு கோரும் மசோதாவை வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.


நீட் விலக்கு கோரும் மசோதாவை வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வரலாறு காணாத பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஜூலை 7 முதல் 17 வரை தமிழக முழுவதும் மூன்று கட்டங்களாக போராட்டங்கள் நடைபெறும். ஜூலை 15 ஆம் தேதி சென்னையில் எனது தலைமையில் பேரணி நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக, தமிழ்நாடு அரசு நியமித்துள்ள ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு செயல்படுவதற்கு தடை விதிக்கக் கோரி பா.ஜ.க.வை சேர்ந்த கரு. நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். அவர் சமர்ப்பித்த மனுவில், சாதாரண, அதற்கும் குறைவான அறிவுடையவர்கள் கூட நீட் தேர்வு இல்லையெனில், மருத்துவர்கள் ஆகிவிடக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இக்குறிப்பு ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தை அவமதிக்கிற வகையில் உள்ளது என்பதால் இதை வன்மையாக கண்டிக்கிறேன். கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே என்கிற கொள்கையில் பா.ஜ.க.விற்கு இருக்கிற நம்பிக்கையின் காரணமாக இக்கருத்து வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில்
உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்படுகிற பா.ஜ.க.வின் தமிழர்கள் விரோத போக்கை அம்பலப்படுத்துகிற வகையில் கருத்தியல் ரீதியாக காங்கிரஸ் கட்சியினர் தீவிர பரப்புரை மேற்கொள்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் திணிக்கப்பட்ட நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுகிற வகையில், தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அரசமைப்பு சட்டப் பிரிவு 254-ன்படி தமிழக சட்டப் பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுகிற வகையில் நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத் தொடரில் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...