தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தி.மு.க.வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்

அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் இன்று தி.மு.க.வில் இணைந்தார்.  

News image
Updated On :3 ஜூலை 2021, 3:44 pm

DIN

அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் இன்று தி.மு.க.வில் இணைந்தார். 
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அதுபோது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பி.என்.பி.இன்பசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.,  ஆகியோர் உடனிருந்தனர். 
இதேபோல் அ.ம.மு.க. கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி.ஜெயந்தி பத்மநாபன் தலைமையில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை மற்றும் அணிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் இன்று தி.மு.க.வில் இணைந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.