தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நியாயவிலைக் கடைகளில் தரமான பொருள்கள் வழங்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்

நியாயவிலைக் கடைகளில் தங்குதடையின்றி தரமான, அத்தியாவசியப் பொருள்கள் தங்குதடையின்றிக் கிடைக்க வேண்டும்

News image
நியாயவிலைக் கடைகளில் தரமான பொருள்கள் வழங்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்
Updated On :3 ஜூலை 2021, 10:25 am

DIN

நியாயவிலைக் கடைகளில் தங்குதடையின்றி தரமான, அத்தியாவசியப் பொருள்கள் தங்குதடையின்றிக் கிடைக்க வேண்டும் என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் நலனுக்காகக் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டங்களான நியாயவிலைக்கடைகள், குடும்ப அட்டைகள் வழங்குதல், உணவுப் பொருட்கள் விநியோகம், சிறப்பு பொது விநியோகத்திட்டம், நியாய விலைக்கடைகளைக் கணினிமயமாக்கல், கைவிரல் ரேகைப்பதிவு, குடும்ப அட்டைகள் மாற்றம், பல்பொருள் அங்காடிகளில் தரமான பொருட்களை வழங்குதல், கரோனா காலத்தில் அரசின் நலத்திட்டங்களான உணவுப்பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகையினைப் பொதுமக்களுக்கு வழங்குதல் மற்றும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள், நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (3.7.2021) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பொதுமக்களுக்கு நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைத்திடவும், பொருட்களின் தரத்தினை உறுதி செய்திடவும், குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்குக் காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் கிடைத்திட நடவடிக்கை எடுத்திடவும், கோவிட் பெருந்தொற்று காலத்தில் கடனுதவி கோரும் சுயஉதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் தொழில்முனைவோர் போன்றவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட கூட்டுறவு சங்கங்கள் வாயிலாகத் தகுதியானவர்களுக்கு கடன் வழங்கிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பொது விநியோகத்திட்டத்தை முழுவதும் கணினிமயமாக்குதல், பல துறைகள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளை ஒரே துறையின்கீழ் கொண்டு வருதல், வாடகைக் கட்டிடங்களில் செயல்படும் நியாய விலைக்கடைகளுக்குச் சொந்த கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், பெண் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், சேமிப்புக்கிடங்குகளை மேம்படுத்துதல், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நெல் ஆகியவற்றை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டுசெல்லப்படுவதை இணைய வழியில் கண்காணித்தல், எடைக்குறைவு போன்றவற்றைக் களைதல், தரமான சேவையினைப் பொதுமக்களுக்கு வழங்குதல் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

தமிழக மக்களுக்குக் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயக் கடன், நகைக்கடன் வழங்குதல், மானிய விலையில் உரம் மற்றும் விவசாய இடுபொருட்கள் வழங்குதல் போன்றவற்றை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.