இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

தமிழகத்தில் இன்று மேலும் 3,867 பேருக்கு கரோனா; 72 போ் பலி 

தமிழகத்தில் இன்று மேலும் 3,867 பேருக்கு கரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது. 

News image
Updated On :4 ஜூலை 2021, 1:54 pm

DIN

தமிழகத்தில் இன்று மேலும் 3,867 பேருக்கு கரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,867 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 445 பேருக்கும், ஈரோட்டில் 349 பேருக்கும், சேலத்தில் 245 பேருக்கும், திருப்பூரில் 225 பேருக்கும், தஞ்சாவூரில் 227 பேருக்கும், சென்னையில் 222 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,96,287ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து இன்று மேலும் 4,382 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 24,27,988-ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 35,294 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கரோனா பாதிப்புக்குள்ளாகி இன்று 72 போ் பலியாகியதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,005-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,56,330 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.