‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

உசிலம்பட்டி அருகே கொள்முதல் மையத்தில் நெல் மூட்டைகள் திருட்டு

உசிலம்பட்டி அருகே நெல் கொள்முதல் மையத்தில் மர்மநபர்கள் நெல் மூட்டைகளைத் திருடி சென்றது தெரிய வந்துள்ளது.

உசிலம்பட்டி அருகே கொள்முதல் மையத்தில் நெல் மூட்டைகள் திருட்டு

Published On :

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே நெல் கொள்முதல் மையத்தில் மர்மநபர்கள் நெல் மூட்டைகளைத் திருடி சென்றது தெரிய வந்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிந்துபட்டியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நெல் மூட்டைகளை ஷேர் ஆட்டோவில் கடத்தி செல்லுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உசிலம்பட்டி அருகே சிந்துபட்டி கிராமத்தில் அரசு சார்பில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிந்துபட்டி,  அருகே உள்ள  பல்வேறு கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள்  நெல்கதிர்களை அறுவடை செய்து நெல் மூட்டைகளை அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் அரசு நெல் கொள்முதல் மையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை சிலர் திருட்டுத்தனமாக ஷேர் ஆட்டோவில் கடத்தி செல்வதாக தகவல் தெரிய வந்துள்ளது. ஷேர் ஆட்டோவில் நெல் மூட்டைகளை கடத்திய போது அங்கிருந்த யாரோ ஒருவர்  போனில் அதனை வீடியோவாக பதிவு செய்து  சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ உசிலம்பட்டி பகுதியில் வேகமாக வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.