திரையரங்குகள் திறக்க அனுமதியில்லை: எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது?
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக நடைமுறையிலிருக்கும் பொதுமுடக்கம், ஒரு சில கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக நடைமுறையிலிருக்கும் பொதுமுடக்கம், ஒரு சில கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் எவற்றுக்கெல்லாம் தடை தொடரும் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கரோனா நோய்த் தொற்று பரவலைக் குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
இதையும் படிக்கலாமே.. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - முழு விவரம்
தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.
மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு (புதுச்சேரி நீங்கலாக) தடை தொடரும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீடிக்கும்.
திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள் திறக்க தடை.
பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள் நடத்தத் தடை
பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் நடத்தவும் தடை நீடிக்கும்.
இதையும் படிக்கலாமே.. ஜிகா வைரஸ் எப்படி பரவுகிறது? ஏன் அச்சப்பட வேண்டும்?
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க விதிக்கப்பட்ட தடை தொடரும்.
உயிரியல் பூங்காக்கள் திறக்கவும் அனுமதியில்லை.
நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதே நிலை தொடர்கிறது.
இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதே நிலை தொடர்கிறது.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...