சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஆரியபட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆரியபட்டி கிராமத்தில் மதுரை ராயல் எம்பரர்ஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக 1,000 மரக்கன்றுகள் நடும் விழா துவக்கி வைக்கப்பட்டது.

News image
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆரியபட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா
Updated On :28 ஜனவரி 2024, 3:36 am

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆரியபட்டி கிராமத்தில் மதுரை ராயல் எம்பரர்ஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக 1,000 மரக்கன்றுகள் நடும் விழா துவக்கி வைக்கப்பட்டது.

மதுரை ராயல் எம்பரர்ஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக செல்லம்பட்டி ஒன்றியம் ஆரியபட்டி, ராமநாதபுரம் கல்யாண கருப்புச்சாமி பெரிய ஊரணியில் 1000 மரக்கன்றுகள் நடும் விழாவில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி.அய்யப்பன், லயன்ஸ் சங்கம் இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் இராதாகிருஷ்ணன், மரக்கன்றுகளை நட்டு  வைத்து துவக்கிவைத்தனர்.

இதில், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் எம்.வி.பி.ராஜா, நகரச் செயலாளர் பூமாராஜா, ஆவின் நிர்வாகக்குழு துரை தனராஜன், மாணவரணி மகேந்திர பாண்டியன், ஊராட்சி மன்றத் தலைவர் ஆரியபட்டி மகேஸ்வரி பாண்டியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிந்துபட்டி ஜெயராமன், ஒன்றிய கவுன்சிலர் வசந்த சின்னகாமன், துணை ஆணையாளர் பரமசிவம், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் தலைவர் பாபு, செயலாளர் முத்துமணி, பொருளாளர் சுசீந்தர், சங்க ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.