டெங்கு பரவல்: சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளின் பலன் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளின் பலன் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சென்னை மாநகரம் முழுவதும் பயன்படுத்தப்படாத இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த வாகனங்களில் தேங்கும் மழைநீரில் டெங்கு கொசு உருவாகின்றது.
இதனால் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுகிறது. எனவே இந்த வாகனங்களை அப்புறப்படுத்தி, அவற்றை பொது ஏலம் விடவும், டெங்கு கொசு பரவலைத் தடுக்கவும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா இரண்டாவது அலை தணிந்துள்ள நிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இதுவரை எடுத்த நடவடிக்கைகளின் பலன் குறித்து சென்னை மாநகராட்சி
விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...