மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

வைத்தீஸ்வரன் கோயிலில் ஒலிம்பிக் சுயபடமெடுக்கும் மையம் அமைப்பு

இந்திய ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்த நாடு முழுவதும்  பொதுமக்கள் ஒலிம்பிக் சுயபடமெடுக்கும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

News image

வைத்தீஸ்வரன் கோயிலில் ஒலிம்பிக் சுயபடமெடுக்கும் மையம் அமைப்பு

Updated On :13 ஜூலை 2021, 6:33 am

சீர்காழி: ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து   இந்திய ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்த நாடு முழுவதும்  பொதுமக்கள் ஒலிம்பிக் சுயபடமெடுக்கும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், இரயில்வே நிலையங்களில் ஒலிம்பிக் சுயபடமெடுக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியிலும்  இந்திய ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்த சுயபட மையம்    (செல்ஃபி பாயின்ட் ) சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பழைய டயர்களை கொண்டு  ஐந்து வண்ண ஒலிம்பிக் வளையங்களை பேரூராட்சி செயல் அலுவலர்  கு.குகன் அமைத்துள்ளார்.

இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு உற்சாகமூட்ட பொதுமக்கள் இந்த சுயபட மையத்தில் படம் எடுத்து  சமூக வலைதளங்களில் ஹேஷ் டேக்குடன் பதிவிட அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக  இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்  மகா அலெக்ஸ்சாண்டர், நகர செயலாளர் ம. அன்புச்செழியன், மாவட்ட பிரதிநிதி இரா.கமலநாதன்,   நகர அவைத்தலைவலர் வி. சுந்தரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி எஸ்.சாமிநாதன் உள்பட ஏராளமானவர்கள் படம் எடுத்து பதிவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.